[தமிழ் ஈழம் குறித்த சீமானின் உரைக்கு ஆதரவாக நான் உலக தமிழ் மக்கள் அரங்கத்தில் பதிந்த சில விடயங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் ]
அன்புக்குரிய அண்ணன் அறிவழகன் அவர்களுக்கு....
சீமான் அவர்கள் கூறியதில் பிரபாகரனை தலைவனாக ஏற்பது இந்திய நிலப்பரப்பில் வாழும் தமிழனுக்கு உகந்தது இல்லை என்று சொல்லுகிறீர்கள். நாம் நினைத்தால் பிரபாகரன் போலே பலநூறு பேரை உருவாக்க முடியும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள். கண்டிப்பாக முடியாது தோழரே பிரபாகரன் போன்ற இன்னொரு மனிதன் இந்த மண்ணில் பிறக்க, உருவாக்கவோ முடியாது. மேலும் பிரபாகரனைத்தலைவன் என்பவர்களுக்கு வன்னிப்பகுதியை சுட்டி காட்டி இருக்கிறீர்கள். ஏன் தோழரே பெரியாரை பின்பற்ற வேண்டுமெனில் அவன் இந்தியாவில் பிறந்து இருக்க வேண்டுமா. லெனினை பின்பற்றுபவர்கள் இரசியாவில் பிறந்து இருக்க வேண்டுமா?. சீமான் சொல்வதில் என்ன பிழை கண்டீர். நம் தமிழ்நாட்டு தமிழன் நடிக,நடிகையர் பின்னாலும் அரசியல் திருடர்கள் பின்னாலும் அணிவகுக்கலாம் ஒரு போராளியின் பின்னால் அணிவகுக்க கூடாதா.? நாங்களும் யுத்த களத்தில் உயிர்விட வேண்டும் என்று சீமான் சொல்லவில்லை. அந்த மாபெரும் மனிதனின் தியாகத்தை, வீரத்தை தமிழக தமிழன் உணரவேண்டும் என்கிறான்.தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்கவேண்டும் என்று சீமான் ஒரு போதும் சொல்லவில்லை. தனி ஈழம் அமைந்தால் நம் உறவுகள் தொடரும் என்கிறார் இதில் பிழை என்ன இருக்கிறது தோழரே!
சீமானின் அன்றைய உரையில் தவறாக என்ன இருந்தது என்றே புரியவில்லை. மலரப்போகும் ஈழத்தில் சாதி,மதங்கள் இருக்காது என்றார். பிரபாகரன் முருகனை வனுங்குபவர் என்பதே செவிவழி செய்தி. ஆனால் அவர் பெரியாரின் பிள்ளை என்பதை சீமான் நமக்கு சொன்னார். நாளை ஈழம் மலர்ந்தால் உலகளாவிய தமிழர்களின் பிரச்சனைகளுக்கு அண்ணன் குரல் கொடுப்பார் என்றார். அது மிகைப்படுத்த பட்ட கனவாககூட இருக்கட்டும். உலக வரைபடத்தில் சீமான் சொன்னது போலே தமிழனுக்கு என்றொரு நாடு உடனடி தேவை. இந்த தமிழக மண்ணில் மேலும் நம்மை இந்த அரசியல் வியாபாரிகள் ஏமாத்த முடியாது என்று சொன்னார். நம் இந்தியா புலிகளை தடை செய்து வைத்து இருக்கிறது. இந்த தடையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த நம் தேசத்தை கேட்பதில் என்ன பிழை இருக்கிறது. அது இந்திய இறையாமையை எதிர்த்ததாக ஆகாது. நீங்கள் சொல்வது போலே நம் இளைஞர்கள் வன்னி சென்று மாவீரர் ஆவதுதான் இந்திய இறையாமைக்கு எதிரானது. எங்கள் ஆதரவு எல்லாம் கொள்கை ரீதியானது. புலிகளின் தவறை தாயுள்ளத்தோடு மன்னியுங்கள் என்று இந்திய அரசை நாங்கள் மன்றாடி கேட்டுகொள்கிறோம். இந்த தமிழக மண்ணில் பிரபாகரனுக்கு நிகரான ஒருதலைவன் உண்டா என்றால் இல்லை என்பதே பதில். நம் முன்னோர்களின் வீரத்தை உலக அரங்கில் உயர்த்தி பிடித்த எங்கள் அண்ணனை மனப்பூர்வமாக தலைவனாக ஏற்று கொள்கிறோம். இதில் இந்திய இறையாமைக்கு எந்த குந்தகமும் இல்லை என்பதே உண்மை. அது வேறு நிலப்பரப்பு என்று ஒதுக்கி விட முடியாது. அங்கு செத்து மடிவது எங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்னும் போது அவர்களுக்காக கண்ணீர் வடிப்பதிலும் அவர்கள் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பதிலும் என்ன பிழை இருக்க முடியும்?.
Monday, August 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment